மகாராஷ்டிரா: நக்சல் அமைப்பின் பெரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்!
மகாராஷ்டிரா: நக்சல் அமைப்பின் பெரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்!

மகாராஷ்டிரா கோண்டியா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் முயற்சியில் நக்சல் குழு பதுங்கியிருந்த இடம் தகர்த்தப்பட்டு மற்றும் மின்னணு வெடிபொருட்கள் உட்பட பெரிய அளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சனிக்கிழமை தரேக்சா காட் பகுதியில் கோண்டியா காவல்துறை மற்றும் நக்சல் எதிர்ப்பு குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். காட்டுப்பகுதியில் இருந்து 20 கிலோகிராம் எடையுள்ள இரும்பு பெட்டிகள், வெடிபொருள் தயாரிக்க 150 ராடுகள் மற்றும் மின்னணு வெடிபொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக கோண்டியா காவல் ஆய்வாளர் விஷ்வா பன்சாரே கூறினார்.
Maharashtra: In a joint operation, Gondia Police and Anti-Naxal squad yesterday busted a Naxal hideout near Dareksa Ghat and recovered explosives including 27 electric detonators. pic.twitter.com/TMVTQEZQ7g
— ANI (@ANI) December 26, 2020
"காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, அந்த பகுதி இணைந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது. 27 மின்னணு சாதனங்கள் உட்பட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார். மேலும் அதற்கு UAPA சட்டத்தின் கீழும் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஜாகண்ட் காவல்துறை, கும்லா மாவட்டத்தில் ஐந்து நக்சல்கள் மற்றும் அவர்களது ஆயுதங்கள், வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் ஐவரும் TPC குழுவை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. கும்லா காவல் ஆணையர், H.P ஜனார்த்தனன், "துப்பாக்கியில் தோட்டா உட்பட, இரண்டு அவர்கள் மூவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.