இந்தியாவில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் தொற்றுக்கு இரண்டாவதாக மகாராஷ்டிராவில் பெண் மரணம்.!
இதற்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் டெல்டா பிளஸ் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By : Thangavelu
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மகாராஷ்டிராவில் 80 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய அளவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. நாட்டிலேயே அதிகளான டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராதான் உள்ளது. அங்கு இதுவரை 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவர் டெல்டா பிளஸ் தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொரோனாவால் அவதியுற்று வரும் மக்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸ் மிகப்பெரிய சவாலாக அமையும் என கூறப்படுகிறது.
