புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை இந்தியர்கள்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை இந்தியர்கள்!

By : Saffron Mom
இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இந்த வேளாண் சட்டங்கள் குறித்து நியூஸ் 18 நெட்ஒர்க் ஆய்வு நடத்தியதில், புதிய வேளாண் சட்டங்களுக்குப் பெரும்பான்மையான இந்தியர்கள் ஆதரவளிக்கின்றனர் மற்றும் போராட்டங்களை நிறுத்த கோரியும் கேட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

22 மாநிலங்களில் நடத்திய ஆய்வில், பெரும்பான்மையானோர் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மேலும் விவசாய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், தெலுங்கான, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேஷ் போன்ற மாநிலங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் மயமாக்கப்பட்டதால் அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் புதிய சட்டங்களுக்கு 53.6 சதவீதம் பேர் ஆதரவளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த புதிய வேளாண் சட்டங்கள் மூலம் APMC மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க முடிகின்றது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை யாருக்கு வேண்டுமானாலும் சிறந்த விலையில் விற்க அனுமதியளிக்கின்றது. மேலும் நியூஸ் 18 க்கு பேசிய ஐந்தில் மூன்று பேர் இந்த புதிய வேளாண் சட்டங்கள் மூலம் நல்ல விலையைப் பெரிய முடியும் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கு ஆதரவளிக்கும் சதவீதமும் 73 ஆக உயர்ந்துள்ளது.

ஆதரவளிக்கும் பாதிப்பேர் இதை எதிர்ப்பவர்களின் போராட்டத்தில் அரசையல்மயமாக்கப்பட்டுள்ளது மற்றும் பாதிக்கும் மேற்பட்டோர் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் பல சலுகைகள் வழங்கியும் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பெறவே கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அரசாங்கம் குறைந்தபட்ச விலைக்கான(MSP) உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது.
மேலும் புதிய வேளாண் சட்டங்களுக்குத் தென் மாநிலங்களிலிருந்து அதிகபட்சமாக 74 சதவீதம் பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். வட மாநிலங்களில் அதிகபட்சமாக 63.77 சதவீதம் பேரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
