Kathir News
Begin typing your search above and press return to search.

'மேக் இன் இந்தியா'வின் அடுத்தகட்ட பாய்ச்சல் - முழுவதும் இந்தியாவிலேயே தயாரான ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்

முழுவதும் இந்தியாவிலேயே தயாரான ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

மேக் இன் இந்தியாவின் அடுத்தகட்ட பாய்ச்சல் - முழுவதும் இந்தியாவிலேயே தயாரான ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Oct 2022 11:13 AM GMT

முழுவதும் இந்தியாவிலேயே தயாரான ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முழுவதும் தயாரான முற்றிலும் அணுசக்தியில் இயங்கக்கூடிய ஐ.என்.எஸ் நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக தகவல் பாதுகாப்பு படையினர் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் தயாரான ஐ.என்.எஸ் எனும் நீர்மூழ்க கப்பல் கட்டும் பணியை இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் தொடங்கியது.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் 2012 ஆம் ஆண்டில் விசாகப்பட்டினம் கடற்கரை தளத்தில் முன்னோட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 6000 டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் 85 மெகாவாட் திறன் கொண்ட உயர் அழுத்த அணு உலைகள் மூலம் இயங்கும் இந்த நீர் மூழ்கி கப்பலில் இருந்தபடி ஏவுகணைகளை செலுத்தி எதிரிகளின் இலக்கை தாக்க முடியும். இந்நிலையில் இன்று இந்த அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள சோதனை நடத்தியதில் இலக்கை துல்லியமாக தாக்கி அளித்ததாக ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் அணுசக்தியில் இயங்கும் நீர்முழ்கி கப்பல்கள் நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News