Begin typing your search above and press return to search.
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு !
மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இன்று பதவியேற்றார்.

By :
மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இன்று பதவியேற்றார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநிலத்தையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2831638
Next Story