'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி: இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.!
பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பிரதமர் மோடி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானாலியில் உரையாற்றி வருகிறார்.

By : Thangavelu
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு வானாலியில் உரையாற்ற உள்ளார். அப்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று குறித்து பேசுவார். பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.
பதவியேற்ற நாள் முதல் இன்று வரை பிரதமர் மோடி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானாலியில் உரையாற்றி வருகிறார்.
அந்த மாதத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து நாட்டு மக்களிடம் எடுத்துரைப்பார். அதே போன்று இன்றைய வானனொலி நிகழ்ச்சியில் கொரோனா பரவல் குறித்து அதிகமாக உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
