Kathir News
Begin typing your search above and press return to search.

அலைபேசி மற்றும் வாகனங்கள் இன்றி இருக்கும் பல காவல் நிலையங்கள்!

அலைபேசி மற்றும் வாகனங்கள் இன்றி இருக்கும் பல காவல் நிலையங்கள்!

அலைபேசி மற்றும் வாகனங்கள் இன்றி இருக்கும் பல காவல் நிலையங்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  30 Dec 2020 1:20 PM GMT

செவ்வாயன்று காவல் அமைப்புகள் குறித்துக் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்(BPR&D) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 16,833 மொத்த காவல் நிலையங்களில், 143 காவல்நிலையங்கள் அலைபேசிகள் மற்றும் 257 காவல் நிலையங்கள் வாகனங்கள் இன்றியும் இருக்கின்றது என்று தெரிவித்துள்ளது.

காவல் அமைச்சகம் குறித்து BPR&D வெளியிட்ட அறிக்கையில், ஆந்திரப் பிரதேசத்தில் 1,021 காவல் நிலையங்களில் 135 நிலையங்கள் வாகனங்கள் இன்றி செயல்படுகின்றது. ஆந்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 75 காவல் நிலையங்கள் வாகனங்கள் இன்றி உள்ளது.

மேலும் மணிப்பூர் மற்றும் மேகாலயா 9 காவல் நிலையங்களில், இமாச்சல் பிரதேசத்தில் எட்டு நிலையங்களில், பஞ்சாபில் ஏழு, அசாம், ஒடிசா மற்றும் அருணாசல் பிரதேசத்தில் நான்கு மற்றும் உத்தர காண்டில் இரண்டு காவல் நிலையங்களில் வாகனங்கள் இன்றி உள்ளது.

அதனைத் தொடர்ந்து 638 காவல் நிலையங்களில் தொலைப் பேசிகள் மற்றும் 143 காவல் நிலையங்களில் வயர்லெஸ் அலைபேசிகள் இன்றியும் உள்ளது. ஜம்மு&காஷ்மீரில் 79 காவல் நிலையங்களைத் தொடர்ந்து அசாமில் 141 காவல் நிலையங்கள் தொலைப்பேசிகள் இன்றி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 75 நிலையங்களிலும், பஞ்சாபில் 69 யிலும், மணிப்பூரில் 64 இல், மேகாலயாவில் 62 இல், அருணாச்சல பிரதேசத்தில் 54 இல், நாகாலாந்தில் 36 நிலையங்களில், சத்தீஸ்கரில் 27 இல், திரிபுராவில் 14 இல், ராஜஸ்தானில் 9 இல், ஒடிசாவில் மூன்றும் தொலைப்பேசி இல்லாமல் இருக்கின்றது.

அறிக்கையின் படி, ஒடிசாவில் 38 காவல் நிலையங்களில் அலைபேசிகள் இல்லை. பஞ்சாபில் 36 யிலும், நாகாலாந்தில் 18 யிலும், ஜம்மு&காஷ்மீரில் 17 யிலும், லக்ஷ்ட்வீப்பில் 7யிலும், மணிப்பூரில் 11, மற்றும் அருணாசல் பிரதேசத்தில் நான்கு, மேற்கு வங்காளத்தில் இரண்டு போன்ற காவல் நிலையங்களில் அலைபேசிகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டில் இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களில் முக்கியமான உட்கட்டைப்புகள் இல்லாமல் இருப்பது கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய தேதி வரை சில காவல் நிலையங்கள் இன்னும் காவல்நிலைய தலைமை அமைச்சகத்துடன் இணைக்க வில்லை என்றும் கூறியுள்ளது. அறிக்கையின் படி, 16,955 அனுமதி பெற்ற காவல் நிலையங்கள் உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News