Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதத்திற்கு இவ்வளோ அடியா? அசர வைக்கும் 2015-க்கு பிந்தய புள்ளிவிவரம்!

Maoist influence down to just 46 districts in 2021 from 96 in 2010

பிரதமர் மோடி ஆட்சியில் இடதுசாரி தீவிரவாதத்திற்கு இவ்வளோ அடியா? அசர வைக்கும் 2015-க்கு பிந்தய புள்ளிவிவரம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Feb 2022 2:10 PM GMT

2021 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 46 மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. 2010 ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் இதுபோன்ற 96 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் இருந்தது என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மோடி அரசாங்கத்தின் கொள்கையால், "நாட்டில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

2010ல் 96 ஆக இருந்த நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை, 2021ல் 46 ஆக குறைந்துள்ளது. வன்முறை சம்பவங்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் இருந்ததைவிட, 2021-இல் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக, 2010 இல் 1,005 ஆக இருந்த இறப்புகளின் எண்ணிக்கை 2021 இல் 147 ஆக வெகுவாகக் குறைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் ஒரு கொள்கையை வகுத்து. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு செயல் திட்டத்தை கொண்டுவந்தது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தப்பட்டு, அதன் விளைவாக, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ-எம் சர்வதேச அமைப்பும் மாவோயிஸ்ட் அமைப்பின் ஒரு பகுதியாகும்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News