போர் சூழல் ? கிழக்கு லடாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட MARCOS கமாண்டோக்கள் - பின்னணி என்ன?
போர் சூழல் ? கிழக்கு லடாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட MARCOS கமாண்டோக்கள் - பின்னணி என்ன?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்துவரும் மோதல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் (MARCOS) கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்திய ராணுவத்தின் பாரா சிறப்பு படைகளும், இந்திய இந்திய விமானப்படையின் கருடா ஆப்பரேடிவ்களும் அங்கு இருக்கும் நிலையில் தற்பொழுது MARCOS படைகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்மூன்று சேவைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, கடற்படை கமாண்டோக்களுக்கு குளிர்கால நிலையில் இருப்பதற்கு பயிற்சி கொடுப்பதே இதன் காரணம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டு ஏப்ரல்-மேயில் இருந்து, இந்திய-சீன படைகளின் மோதல் பதற்றங்கள் ஏற்பட்டுள்ள பகுதியில் MARCOS படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்படை, விரைவில் ஏரியின் செயல்பாடுகளுக்காக புதிய படகுகளையும் பெற உள்ளனர். அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்புப் படைகள் மற்றும் அமைச்சரவை செயலகத்தில் சிறப்பு எல்லைப்படை உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகள் கிழக்கு லடாக்கில் நீண்டகாலமாக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய விமானப்படையின் சிறப்புப் படைகள் இந்திய-சீன மோதலின் ஆரம்ப நாட்களில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையின் முக்கியத்துவம் வாய்ந்த மலை முகடுகளின் அடிவாரங்களுக்கு சென்றன. எதிரி தரப்பில் இருந்து, எந்த ஒரு போர் அல்லது சாதாரண விமானங்கள் வருகின்றனவா என்பதை கவனித்துக் கொண்டன.
ராணுவம் மற்றும் விமான படை இரண்டையும் சேர்த்து சிறப்புப் படைகள் தற்போது 6 மாதங்களுக்கும் மேலாக உள்ளனர். ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் இந்தியத் தரப்பு சிறப்புப் படைகள் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள மலை முகடுகளை சீனாவை கைப்பற்ற விடாமல் தாங்களே கைப்பற்றினர்.
அதுமுதல் சீனர்களும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையின் தங்கள் பக்கத்தில் சிறப்புப் படைகளை நிறுவி வருகின்றனர்.

இதற்கு முன்னர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் உள்ள உலார் ஏரி பகுதியில் தீவிரவாதத்தை சமாளிக்க MARCOS படைகளை இந்திய கப்பற்படை நிறுவி இருந்தது.
2016ஆம் ஆண்டின் பதன்கோட் தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை கருடாக்களை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நிலைநிறுத்தப்பட்ட உடனேயே கருடர்கள் தங்கள் திறனை நிரூபித்தனர். 2008 மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்வி மருமகன் தலைமையிலான பயங்கரவாத குழுக்களை அகற்றி, இதற்காக ஒரு அசோகச் சக்கரம், மூன்று ஷாவுரிய சக்கரங்கள் மற்றும் பல துணிச்சலான விருதுகளை பெற்றனர்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து கருடாக்கள் வழக்கமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு நடவடிக்கைகளுக்காக இந்திய ராணுவம் பல சிறப்பு பட்டாலியன்களை நிறுத்தியுள்ளது. இவைகளில் ஒன்று தான் 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக்கையும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.