கொரோனா தடுப்பூசிகள்: சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது.
By : Thangavelu

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதற்கான மருத்துவ பரிசோதனை தரவுகளையும் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், இதனை ஆராய்ந்த வல்லுநர் குழு இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசு வெளிச்சந்தையில் தடுப்பூசி மருந்துகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இந்த இரண்டு தடுப்பூசிகள் கடைகளில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy: Dinamalar