Kathir News
Begin typing your search above and press return to search.

பாலியல் வழக்கில் சிக்கிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் பொறுப்பு! முதல்வர் பினராயி விஜயனின் ஏற்பாடாம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் பொறுப்பு! முதல்வர் பினராயி விஜயனின் ஏற்பாடாம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் பொறுப்பு! முதல்வர் பினராயி விஜயனின் ஏற்பாடாம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  29 Dec 2020 6:15 AM GMT

பாலியல் வழக்கில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. சசி, கேரளா முதலமைச்சர் உத்தரவின் பேரில் பாலக்காடு மாவட்ட செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட உள்ளார்.

கேரளமாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளராக பதவி வகித்து வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் கட்சி பொறுப்பில் இருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மற்றபடி அதிகாரம் எல்லாம் இவர் வசமே இருந்துள்ளது.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த போதிலும், மீண்டும் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது. தற்போது கேரள மாநில செயலாளர் பொறுப்புக்கு விஜயராகவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பாலியல் வழக்கில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சசி முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் பாலக்காடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். ஏற்கனவே தங்கக்கடத்தில் விவகாரத்தில் முதல்வரின் பெயர் அடிபடும் நிலையில், இந்த சம்பவம் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின் பின்னணி

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோரனூர் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பி.கே.சசி. இவர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெண் உறுப்பினர் ஒருவர் பாலியல் புகார் கூறினார். அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் புகாரில் ஆதாரமாக இணைத்து இருந்தார்.

பிருந்தா கரத் உள்ளிட்ட கட்சியின் தேசிய தலைவர்களுக்கும் புகார் அனுப்பபட்டதால் இப்புகார் குறித்து விசாரிக்க அமைச்சர் ஏ.கே பாலன், மற்றும் எம்.பி. பி.கே ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணை நடத்தி சமர்பித்த அறிக்கையில், பி.கே.சசி, பாலியல் ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அவரது நடவடிக்கை அவரது நிலைக்கும், தகுதிக்கும் பொருத்தமானது அல்ல.

பெண்ணிடம் தவறாக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ. சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மாநில தலைமை அறிவித்திருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News