Kathir News
Begin typing your search above and press return to search.

தொலைக்காட்சி என்ற கட்டப்பஞ்சாயத்து நாட்டை பின்னோக்கி நகர்த்துகிறது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

தொலைக்காட்சி என்ற கட்டப்பஞ்சாயத்து நாட்டை பின்னோக்கி நகர்த்துகிறது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 July 2022 1:28 AM GMT

தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நடைபெறுகின்ற விவாதங்கள் என்று சொல்லப்படும் கட்ட பஞ்சாயத்துக்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என.வி.ரமணா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: நீதிபதிகள் எதிராக சமூக ஊடகங்களில் ஒருங்கிணைப்பட்ட பிரசாரங்கள் நடைபெறுகிறது. நீதிபதிகள் எப்போதும் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். தயவுசெய்து அதனை பலவீனம் என்று தவறாக நினைத்துவிட வேண்டும்.

மேலும், புதிய ஊடகக் கருவிகள் மகத்தான திறனைக் கொண்டுள்ளது, ஆனால் சரி மற்றும் தவறு, நல்லது மற்றும் கெட்டதை மற்றும் உண்மையானது, போலியானவை உள்ளிட்டவை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. ஊடக விசாரணைகள் என்பது வழக்குகளை தீர்ப்பதில் மற்றும் வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது. ஊடகங்கள் எப்போதும் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதை நாம் பார்க்கிறோம், சில நேரங்களில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட முடிவெடுப்பது கடினமாகும்.

நீதி வழங்கும் பிரச்சனைகள் குறித்து தவறான தகவல் மற்றும் நிகழ்ச்சி நிரல் சார்ந்த விவாதங்கள் ஜனநாயகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பது நிரூபணம் ஆகிறது. ஊடகங்கள் பரப்பும் பாரபட்சமான கருத்துக்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், அமைப்பு முறைகளுக்கு கேடுவிளைவிக்கும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News