Kathir News
Begin typing your search above and press return to search.

கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த மருத்துவ பொருட்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த மருத்துவ பொருட்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2021 3:39 PM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கை வசதிகள் இன்றி பலர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.





மேலும, ரெம்டெசிவிர் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. மருந்துகளை போர்க்கால அடிப்படையில் தயார் செய்து கொடுப்பது, வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டும் வருகிறது.





இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் தங்களால் முடிந்த மருந்துகள் மற்றும் வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கனடா நாட்டில் இருந்து ஏற்கனவே வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.





இந்நிலையில், இன்று மேலும் 500 வெண்டிலேட்டர்கள் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வெண்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு இன்று விமானம் மூலமாக வந்து சேர்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News