Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனாவுக்கு மாத்திரை தயார்: ரூ.35க்கு கிடைக்கும்!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தினமும் உயர்ந்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மோல்னுபிராவிர் என்ற மாத்திரியை அறிமுகம் செய்ய இருப்பதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் அறிவித்துள்ளது. அதாவது கொரோனா தொற்று உள்ளவர்கள் மாத்திரியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாத்திரையின் விலை ரூ.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு மாத்திரை தயார்: ரூ.35க்கு கிடைக்கும்!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Jan 2022 12:56 PM GMT

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தினமும் உயர்ந்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மோல்னுபிராவிர் என்ற மாத்திரியை அறிமுகம் செய்ய இருப்பதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் அறிவித்துள்ளது. அதாவது கொரோனா தொற்று உள்ளவர்கள் மாத்திரியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாத்திரையின் விலை ரூ.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு பரவி உள்ளது. இதனால் மீண்டும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போன்று மருத்துவமனைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரெட்டி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மோல்ஃப்ளு என்ற மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிலும் தொற்று அதிகமாக பரவியுள்ள மாநிலங்களுக்கு இந்த மாத்திரிகைள் ஏற்றுமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத்திரி¬யின் விலை ரூ.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் ஐந்து நாட்களுக்கு சிகிச்சை எடுக்கும்போது மொத்தம் 40 மாத்திரிரைகள் தேவைப்படும். எனவே ஒருவருக்கு ரூ.1400 இருந்தால் போதுமானது. அதே சமயம் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களும் மாத்திரிகைகளை தாராளமாக பயன்படுத்தாலாம் என கூறப்பட்டுள்ளது.

Source,Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News