காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட தீவிரவாதிகள் - திருத்தி எழுதப்படும் காஷ்மீர் வரலாறு
காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
By : Mohan Raj
காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
லஸ்கர் மற்றும் ஜெய் ஸ்ரீ முகமது பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் அக்குழுக்களை வழிநடத்த தற்போது தலைமை இல்லை என காஷ்மீர் ஏ.டி.ஜி.பி விஜயகுமார் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் போலீசாரின் புள்ளி விவரங்களின்படி இந்த ஆண்டு மட்டும் 169 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 127 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், 42 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு மட்டும் உள்ளூரை சேர்ந்த 99 பேர் பயங்கரவாத குழுக்களில் இணைந்துள்ளனர் இதை கடந்த ஏழு ஆண்டுகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையாக கருதப்படுகிறது.
இதில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு நிலவரம் குறித்து ஏ.டி.ஜி.பி விஜயகுமார் கூறியதாவது, 'காஷ்மீரில் மொத்தம் 13 போலீஸ் மாவட்டங்கள் உள்ளன, இதில் தற்பொழுது 81 பயங்கரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர். இவர்களில் 29 பேர் உள்ளூர்வாசிகள் 52 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். தலைமறைவாக உள்ள அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினரின் கை மேலோங்கி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் தற்பொழுது பந்திபோரா மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் உள்ளூர் பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர்' என கூறினார்.