Kathir News
Begin typing your search above and press return to search.

நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் விமானத்தை தொடர்ந்து, ஏவுகணையும் இந்தியா வசமாகிறது - பலப்படும் இந்தியாவின் பாதுகாப்பு!

Ministry of Defence signs contract worth 423 Cr with US for procurement of Arms for Indian Navy

நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் விமானத்தை தொடர்ந்து, ஏவுகணையும் இந்தியா வசமாகிறது - பலப்படும் இந்தியாவின் பாதுகாப்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  23 Oct 2021 2:27 AM GMT

இந்திய கடற்படைக்கு எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

பிறகு, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரிலும், 10வது போர் விமானம் கடந்த ஜூலை மாதமும் இந்தியாவுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11வது பி-8ஐ போர் விமானம் கோவா வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில்,இந்திய கடற்படைக்கு எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News