Kathir News
Begin typing your search above and press return to search.

68 நகரங்களில் 2,877 சார்ஜிங் ஸ்டேஷன் - இந்தியாவை அடுத்த லெவலில் கட்டமைக்கும் ஃபேம் இந்தியா திட்டம்!

68 நகரங்களில் 2,877 சார்ஜிங் ஸ்டேஷன் - இந்தியாவை அடுத்த லெவலில் கட்டமைக்கும் ஃபேம் இந்தியா திட்டம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2022 6:14 AM IST

பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மின்சார வாகனத் தொழில் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல் நிலையங்களுக்கு ஃபேம் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 மின் திறனேற்றல் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் FAME இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது.

தற்போது, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Input From: Financial Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News