Begin typing your search above and press return to search.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட பாகிஸ்தான் உட்பட 22 யூ டியூப் சேனல்கள் முடக்கம்!
By : Thangavelu
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த மேலும், 22 யூ டியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடியாக முடக்கியுள்ளது. இதில் 18 இந்திய யூடியூப் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 4 சேனல்கள் அடங்கும்
இந்த சேனல்கள் அனைத்தும் தேசிய பாதுகாப்பு பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்த நிலையில், முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை கூறியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்படும் என கூறியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:Live Law
Next Story