Kathir News
Begin typing your search above and press return to search.

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் 'ரத' சக்கரம் எரிப்பு: ஆந்திராவில் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபடும் மிஷனரிகள்!

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே மிகவும் புகழ் பெற்ற காணிப்பாக்கம் சுயம்வு வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ரத சக்கரம் எரிப்பு: ஆந்திராவில் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபடும் மிஷனரிகள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Jan 2022 7:40 AM GMT

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே மிகவும் புகழ் பெற்ற காணிப்பாக்கம் சுயம்வு வரசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இக்கோயிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த ரதத்தின் சக்கரம் பழுடைந்துள்ளது. இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சக்கரத்தை கழற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இதனை அறிந்த கிறிஸ்தவ மிஷனரிகள் கடந்த புதன்கிழமை நள்ளிரவு ரதத்தின் சக்கரத்தை தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி கேள்விப்பட்ட இந்துக்கள் கோயில் முன்பாக கூடி உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

கடந்த ஒரு சில மாதமாக ஆந்திரா மாநிலத்தில் கோயில் எரிப்பு மற்றும் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் மிஷனரிகள் தங்களது வேலையை காண்பிக்க தொடங்கியிருப்பதாக இந்துக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அந்தர்வேதி பகுதியில் இருந்த லட்சுமி நரசிம்மர் கோயிலின் ரதத்தை மிஷனரிகள் தீயிட்டு கொளுத்தினர். அதனை தொடர்ந்து நெல்லூர் மாவட்டம், பிட்ரகுண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ரதத்தையும் மிஷனரிகள் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலின் ரதத்தில் இருந்த மூன்று வெள்ளி சிங்கங்கள் திருடு போயுள்ளது. தொடர்ந்து இந்து மத கோயிலில் மட்டும் அட்டூழியத்தை மிஷனரிகள் ஈடுபட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது என இந்து அமைப்புகள் கூறி வருகிறது.

Source: Tamilhindu

Image Courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News