Kathir News
Begin typing your search above and press return to search.

ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களை குறிவைக்கும் மிஷனரிகள் - உள்துறை அமைச்சகத்திடம் பகீர் புகார்!

ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களை குறிவைக்கும் மிஷனரிகள் - உள்துறை அமைச்சகத்திடம் பகீர் புகார்!

ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களை குறிவைக்கும் மிஷனரிகள் - உள்துறை அமைச்சகத்திடம் பகீர் புகார்!

Shiva VBy : Shiva V

  |  6 Jan 2021 6:10 PM GMT

இந்திய மற்றும் சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகள் முழு ஆசியாவையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது 1999-ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வந்த போது வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வருகை தந்த போப் இரண்டாம் ஜான் பால், ஆசியா முழுவதும் நற்செய்தியைப் பரப்புவது கிறிஸ்தவர்களின் தார்மீகக் கடமை என்று கூறினார்.

கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றுவதற்கான சர்ச்சின் இந்த செயல்பாடுகளுக்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மதம் மாற்றுவதற்கு வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவது பற்றியும் இந்து அமைப்புகள் தொடர்ந்து உண்மைகளை வெளியிட்டு வருகின்றன.

Legal Rights Observatory என்ற அமைப்பு இத்தகைய NGO-க்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்து வருகிறது. இந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி ஜார்க்கண்டில் இயங்கும் கல்வாரி நற்செய்தி அறக்கட்டளை(Calvary Gospel Ministries Trust) என்ற கிறிஸ்தவ அமைப்பு All India Mission (AIM) என்ற கிறிஸ்தவ மிஷனரி அமைப்பிடம் இருந்து ₹90.23 கோடி நிதி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

இந்த All India Mission அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் என்.ஜே வர்கீஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று அவர்களின் வலைத்தளத்தில், “ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருவது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அப்பாவி வனவாசிகளை குறி வைத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் இந்த அமைப்பு, அப்பகுதியில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு நிதியளிப்பதாக ஜார்க்கண்ட் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் அதிகளவில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கும் கூட அவர்கள் நிதி உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அரசுக்கு எதிராக ஊர்வலங்கள், தர்ணா, போராட்டங்கள் நடத்துவதற்கும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதற்கும் இது போன்ற கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதாக ஜார்க்கண்ட் காவல் துறையினர் கூறியுள்ளனர். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மேலும் 88 கிறிஸ்தவ மிஷினரிகளின் NGO-க்களுக்கு ₹292 கோடி ரூபாய் நிதிகள் கிடைத்திருப்பதாகவும், இது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தின் சிறப்பு காவல்துறையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் LRO கூறியுள்ளது.

All India Mission என்ற இந்த அமைப்பின் வலைதள முகவரியை இந்தியர்கள் யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் அவர்களின் வலைப்பக்கத்தின் ஐபி முகவரியை பிளாக் செய்துள்ளனர். இதனை அமெரிக்காவில் இருந்து ஒருவர் ஸ்கிரீன் சாட் எடுத்ததை LRO தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த வலைத்தளத்தில் பல்லாயிரக்கணக்கானோரை மதம் மாற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

Calvary Gospel Ministries Trust மற்றும் All India Mission குறித்து LRO ஒரு விரிவான அறிக்கை தயாரித்து ஜார்க்கண்டில் நடக்கும் வன்முறைகளுக்கு நிதியளிப்பது குறித்த தரவுகளை பட்டியலிட்டு அதன் FCRA பதிவை ரத்து செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஜார்கண்ட் பகுதியில் உள்ள அப்பாவி வனவாசிகளின் சமூக-கலாச்சார சுற்றுச்சூழலை சிதைப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இயக்கங்களுக்கு நிதி அளிப்பதாலும் உள்துறை அமைச்சகம் Calvary Gospel Ministries Trust மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News