இந்துக்களின் சிலை வழிபாட்டை ஒழிக்க'ஜெபிக்கும்' மிஷனரி அமைப்பு.!
இந்துக்களின் சிலை வழிபாட்டை ஒழிக்க'ஜெபிக்கும்' மிஷனரி அமைப்பு.!

By : Yendhizhai Krishnan
கிறிஸ்தவ அமைப்புகள் இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் வெறுப்பைப் பரப்புவது அனைவரும் அறிந்ததே. Canon law எனப்படும் கிறிஸ்தவ சட்டத்தை பின்பற்றி வாட்டிகனுக்கும், போப்புக்கும் மட்டுமே கிறிஸ்தவர்கள் விசுவாசமாக இருப்பதும் பல முறை சமூக ஊடகங்களில் எடுத்துரைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தை இந்தியாவில் கொண்டு வருவோம் என்று மிஷனரிகள் சூளுரைப்பதும் ஒன்றும் புதிதல்ல.
ஆனால் நடுநிலையாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்துக்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுப்பது வழக்கம். அவர்களை தலையில் குட்டி நிதர்சனத்தை உணரச் செய்யும் வகையில் கிறிஸ்தவர்கள் எதைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
Christian are minority and they are planning this ? read everything in the red box pic.twitter.com/QHiynlE7b7
— No Conversion (@noconversion) November 28, 2020
கர்நாடகாவில் இயங்கி வரும் அனைத்திந்திய கிறிஸ்தவ சிறுபான்மையினர் முன்னணி all All India Christian Minority Front வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கர்நாடக மாநிலத்தில் ஜெபியுங்கள் என்று கூறி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்களை மதங்களின் தளைகளில் இருந்து விடுவிக்கவும், மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதற்கான கதவுகளைத் திறந்து விடவும், சாத்தானின் பிடியில் இருந்து குறிப்பாக சிலை வழிபாட்டில் இருந்து விடுதலை பெறவும், நாட்டின் அரசாட்சிக்காகவும்' ஜெபம் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமுவேல் சந்தியாராஜ் என்ற பாதிரியார் வழிநடத்தும் இந்த அமைப்பு 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்குவதாகத் தெரிகிறது. பொதுவாக கிறிஸ்தவ அமைப்புகள் மதம் மாறியவர்களை இட ஒதுக்கீடு சலுகைகளுக்காக ஆவணங்களில் இந்து என்றே குறிப்பிடச் சொல்வது வழக்கம்.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கு என்று கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் வேண்டும், கிறிஸ்துவின் ராஜ்ஜியம் இந்தியாவில் நிறுவப்பட வேண்டும் என்று நினைக்கும் அமைப்புகள் மதம் மாறிய கிறிஸ்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிடும். இந்த அமைப்பும் அது போல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும் தங்களது மதம் கிறிஸ்தவ மதம் என்று பதிவு செய்து கிறிஸ்தவர்களின் வலிமையைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இன்று சிலை வழிபாட்டில் இருந்து மக்கள் 'விடுதலை' பெற வேண்டும் என்று ஜெபிக்கும் இவர்கள் கையில் நாளை அதிகாரம் கிடைத்தால் அதை வைத்து சிலை வழிபாட்டில் ஈடுபடும் உலகின் கடைசி தொல் குடிகளான இந்துக்களை என்ன செய்வார்கள் என்ற அச்சம் ஏற்படாமல் இல்லை. இந்த பட்டியலைப் பார்த்த பின்னாவது நடுநிலை இந்துக்கள் விழித்துக் கொள்வார்களா என்று சமூக ஊடகங்களில் விவாதம் நடக்கிறது.
