Kathir News
Begin typing your search above and press return to search.

அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லையில் இந்தியாவால் நிலைநிறுத்தப்பட்ட நவீன பீரங்கிகள்

அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லைப் பகுதியில் நவீன பீரங்கிகளை இந்தியா நிலை நிறுத்தி உள்ளது சவால்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லையில் இந்தியாவால் நிலைநிறுத்தப்பட்ட நவீன பீரங்கிகள்

KarthigaBy : Karthiga

  |  9 Sep 2022 8:15 AM GMT

சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பகுதி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றது ஆகும் . லடாக், அருணாச்சல பிரதேசம் என இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி சீனா அத்துமீறி வருகிறது .இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் சீனா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சியால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பிலும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.


இதை தொடர்ந்து சீனாவுடனான எல்லை பகுதியை இந்தியா மிகுந்த விழிப்போடு கண்காணித்து வருகிறது. இதற்கு வசதியாக போர் தளவாடங்களும் ஆயுதங்களும் அந்த பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சீன எல்லையில் தற்போது நவீன பீரங்கியான எம்-777 ஹோவிட்சர்களை இந்தியா நிலை நிறுத்தியுள்ளது.


அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பல்வேறு மலை பிராந்தியங்களை உள்ளடக்கிய ரால்ப் பகுதியில் இந்த பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இலகுரக பீரங்கி வகையைச் சேர்ந்தவையான இந்த எம்-777 ஹோவிட்சர்களை சினூக் ஹெலிகாப்டர்கள் மூலமே தேவைப்படும் இடங்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்க முடியும். எனவே இது மிகவும் முக்கியமான நகர்வாக இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவன் தெரிவித்தார்.


அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே ஆளில்லா விமானம் கண்காணிப்பு தளவாடங்கள் உள்பட ஏராளமான போர் தளவாடங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனுடன் எம் 777 ஹோவிட்சர்களும் இணைந்து இருப்பதால் அங்கு படைகளின் தயார் நிலை மேம்படும் என அவர் கூறினார்.


சீனாவுடனான மோதலுக்கு பின் லடாக்கில் பல்வேறு சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்த எம்-777 ஹோவிட்சர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது அருணாச்சலப் பிரதேச எல்லையிலும் இந்த பீரங்கிகள் படையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.


30 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் பெற்ற இந்த எம்-777 ஹோவிட்சர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட இந்த பீரங்கிகள் சவால்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News