Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு 5500 பண்டிட்களுக்கு வேலை அளித்த மோடி அரசு

காஷ்மீரில் 5500 பண்டிட்களுக்கு அரசு வேலை அளித்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு 5500 பண்டிட்களுக்கு வேலை அளித்த மோடி அரசு

Mohan RajBy : Mohan Raj

  |  21 July 2022 11:17 AM GMT

காஷ்மீரில் 5500 பண்டிட்களுக்கு அரசு வேலை அளித்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது, இந்த கூட்டத் தொடரில் காங்கிரஸ் பண்டிட்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி திக் விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர், ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு 2019 ஆம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரான பண்டிட் சமூகத்தவர்களுக்கு 5500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் பணி நியமித்த அமர்த்தப்பட்டு இருப்பதாக நித்தியானந்தராய் குறிப்பிட்டுள்ளார்.


ஆகஸ்ட் 5 2019 க்கு பிறகு இதுவரை பண்டிகைகள் யாரும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்றவில்லை எனவும் தெரிவித்த மத்திய உள்துறை இணைய அமைச்சர் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு அங்கு இதுவரை 128 பாதுகாப்பு படையினரும் 118 பொதுமக்களும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பண்டிட் சமூகத்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News