10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்!
Mother leaves minor boy with pastor to teach 'good manners', pastor arrested for sexually assaulting him

By : Kathir Webdesk
ஆந்திராவில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாய் மத போதகரிடம் மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத் தரும்படி சொல்லி அவரிடம் விட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து தான் பெற்றோருக்கு தெரிய வந்தது.
ஆந்திராவின் தெனாலியில் 26 வயதான அஹரோன் பிரகாஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர், சொந்தமாக தேவாலயத்தை நடத்தி வருகிறார். மதக் கல்வி கற்பிப்பதாகக் கூறி மைனர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாய், அருகில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் சொன்னதால் அவரிடம் கொண்டு சேர்த்தார்.
தன் மகனுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், மத விஷயங்களையும் போதிக்குமாறு போதகரிடம் கேட்டு, அவரை போதகர் வீட்டில் விட்டுச் சென்றார். சிறுவன் போதகருடன் சுமார் 8 மாதங்கள் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுவன் நோய்வாய்ப்பட்டதாகவும், அவனது தந்தை அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
சிறுவனுக்கு காயங்கள் இருந்ததாகவும், இது குறித்து அவனது பெற்றோர் விசாரித்தபோது, பாதிரியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்கள் உள்ளூர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போதகர் மீது ஐபிசி பிரிவு 377 மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பெற்றோர் போதகரிடம் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. புகாரை வாபஸ் பெறுமாறு கிறிஸ்தவ சிறுபான்மை கழகத்தின் இயக்குனர் வற்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர் .
