Kathir News
Begin typing your search above and press return to search.

ம.பி: சட்டவிரோதமாகக் காங்கிரஸ் MLA ஆரிப் மசூத் கட்டிய கட்டிடம் இடிப்பு.!

ம.பி: சட்டவிரோதமாகக் காங்கிரஸ் MLA ஆரிப் மசூத் கட்டிய கட்டிடம் இடிப்பு.!

ம.பி: சட்டவிரோதமாகக் காங்கிரஸ் MLA ஆரிப் மசூத் கட்டிய கட்டிடம் இடிப்பு.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  6 Nov 2020 9:01 PM IST

வியாழக்கிழமை அன்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் MLA ஆரிப் மசூத் கானுகோவனில் இருக்கும் அவரது கல்வி நிலையத்தில் "சட்டவிரோதமாக" அமைக்கப்பட்ட கட்டிடத்தை போபால் மாநகராட்சி இடித்தது.

மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் குடிமக்கள் அமைச்சகத்தின் அனுமதியின்றி 12,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்துள்ளதாக மாநகராட்சியின் கட்டிட அனுமதி பிரிவின் துணை பொறியாளர் AK சாஹ்னி தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் பிரான்சில் எழுந்த கார்ட்டூன் சர்ச்சை தொடர்பாக மசூத் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் மேல் பல குற்றங்கள் எழுந்து வருகின்றன, மேலும் இவர் இதனை பா.ஜ.க வின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

போபாலின் மத்திய MLA , தனது கல்வி நிறுவனத்தின் ஒரு பாதியை பா.ஜ.க அரசாங்கம் சட்டவிரோதமாக தகர்த்தியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும். "பா.ஜ.க வின் எண்ணங்களுக்கு எதிராக நாங்கள் அமைதியாக, சட்டரீதியாக மற்றும் அரசியல் அமைப்பு வரிகளில் போராடுவோம்," என்று சமூக வலைத்தளத்தில் அவரது கருத்தைப் பதிவு செய்தார்.

மாநிலத்தின் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் தீபக் விஜயவர்ஜியா மசூத் குற்றச்சாட்டை மறுத்து, காங்கிரஸ் MLA சட்டவிரோதமாகக் கட்டிடங்களை எழுப்பியுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார். அக்டோபர் 29 இல் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு மசூத் பல குற்றங்களை எதிர்கொண்டு வருகிறார். IPC சட்டம், பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மசூத் மற்றும் மற்ற போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் கூட்டத்தைத் தவிர்க்கும் விதியை போராட்டக்காரர்கள் மீறியதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இந்த போராட்டம் தொடர்பாக ஒரு வழக்கு சம்பந்தமாகக் கடந்த வாரம் மசூத் மற்றும் 49 பேரை காவல்துறை கைது செய்தது. ஆனால் அதே நாளில் அவர்கள் பெயிலில் விடுவிக்கப்பட்டனர். அக்டோபர் 29 இல் மசூத் மற்றும் சில பாதிரியார்கள் உட்பட 2000 பேர் மீது IPC சட்டம் 188 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News