Kathir News
Begin typing your search above and press return to search.

ம பி: தலித் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை - கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு!

ம பி: தலித் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை - கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு!

ம பி: தலித் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை - கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு!

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jan 2021 12:27 PM GMT

இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தனது உண்மை அடையாளங்களை மறைத்துக் கொண்டு மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கட்டாய மதமாற்றம் செய்யும் குற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் போபாலில் அதே போன்று லவ் ஜிகாத் குற்ற வழக்கு வெளிவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று 26 வயது தலித் பெண்மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன்னர், தனது தற்கொலைக்குக் காரணம் ஆதில் கான் என்று எழுதிவிட்டு இறந்துள்ளார். அந்த பெண் TT நாகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

மேலும் காவல்துறை அவரது அறையில் தற்கொலைக்குக் காரணமாவர் குறித்த கடிதத்தையும் எழுதிவைத்ததை எடுத்துள்ளனர். அந்த கடிதத்தில், "என் பெயர் பூஜா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என் மரணத்திற்குக் காரணம் காலிக் கான் மகன் ஆதில் கான்," என்று குறிப்பிட்டிருந்தார்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரின் காவல்துறை ஆதில் கானை கைது செய்து தற்கொலைக்கு உட்படுத்துதல் போன்ற பல்வேறு வழக்கின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியதில், தனது மகளிடம் ஆதில் கான் தனது உண்மை அடையாளத்தை மறைத்துக் கொண்டு பாப்லூ என்று கூறி பழகி வந்துள்ளார். அவர் குறித்து உண்மை தெரிந்தவுடன் அவரிடம் இருந்து விலகிய போது, ஆதில் பலவந்தமாகப் பல துன்புறுத்தல்களைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பழகிவந்துள்ளனர். ஆதில் தனது சகோதரியைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக பூஜா சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் பூஜா மறுத்த பொழுது ஆதில் வேறு பெண்ணோடு பழகத் தொடங்கியுள்ளார். அதனால் மனமுடைந்த பூஜா தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஆதில் மீது மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரியுள்ளார். ஆனால் அதனை காவல்துறை உறுதி செய்யவில்லை. ஆதில் மீது தற்கொலை குற்றத்தின் கீழும் மற்றும் SC-ST தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News