Kathir News
Begin typing your search above and press return to search.

ம.பி: துப்பாக்கிச் சூட்டில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை.!

ம.பி: துப்பாக்கிச் சூட்டில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை.!

ம.பி: துப்பாக்கிச் சூட்டில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  8 Nov 2020 2:29 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பலகாட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் சத்தீஸ்கர் பாஸ்டர் பகுதியில் வாழும் ஷர்தா என்று கண்டறியப்பட்டு அவர் கட்டியா-மோச்சா விஸ்டார் தலாம் அமைப்பின் செயலில் உள்ள உறுப்பினர் என்றும் தெரியவந்ததுள்ளதாக பாலகாட் பகுதியின் காவல் ஆணையர் அபிஷேக் திவாரி தெரிவித்தார்.

"வெள்ளிக்கிழமை நள்ளிரவில் போர்ப்படையும் மற்றும் காவல் குழுவும் கன்ஹா புலி வனப் பகுதிக்கு அருகே உள்ள மால்க்ஹெடி காட்டில் தேடுதல் பணியில் இறங்கியபோது, அங்கு 25 மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர். காவல் குழுவும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு குழு அந்த இடத்திற்குச் சென்று சோதனை செய்ததில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சடலம் கண்டறியப்பட்டது," என்று பாலகாட் SP தெரிவித்தார்.

"காவல் குழு மற்ற இரண்டு இடங்களில் இரத்த அடையாளங்களைக் கண்டவுடன் மேலும் ஓரிரு மாவோயிஸ்ட்கள் காயமடைந்திருக்கக் கூடும்," என்றும் SP குறிப்பிட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து அன்றாட பொருட்கள் மற்றும் ரேஷன்களை காவல் குழு அதிகளவில் எடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News