Kathir News
Begin typing your search above and press return to search.

போலி ஆதார் அட்டை பயன்படுத்தி பெண்ணை ஏமாற்றிய ரஃபிக் மீது FIR!

போலி ஆதார் அட்டை பயன்படுத்தி பெண்ணை ஏமாற்றிய ரஃபிக் மீது FIR!

போலி ஆதார் அட்டை பயன்படுத்தி பெண்ணை ஏமாற்றிய ரஃபிக் மீது FIR!
X

Saffron MomBy : Saffron Mom

  |  30 Dec 2020 1:03 AM IST

நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்து பெண்களைக் குறிவைத்து, அவர்களிடம் தங்கள் அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கட்டாய மதமாற்றம் செய்யும் 'லவ் ஜிகாத்' என்று அழைக்கப்படும் குற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதனைக் குறைப்பதற்கு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டங்களும் ஏற்றப்பட்டது, அதனைத் தொடர்ந்து அதன் கீழ் பல்வேறு வழக்குகளும் பதிவாகி வருகின்றது பல குற்றங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது மத்தியப் பிரதேசம் போபாலில் கோலார் பகுதியில் லவ் ஜிகாத் குற்ற வழக்குப் பதிவாகியுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் முகமத் ரஃபிக் போலி அடையாளங்களை வைத்துக்கொண்டு இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளான். அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோதரப்பியாக ராஃபிக்கை நியமித்துள்ளனர். ரஃபிக் தான் முஸ்லீம் என்பதை அந்த குடும்பத்தினரிடமிருந்து மறைத்துக் கொண்டு தன்னை ரவி என்று அறிமுகம் செய்துள்ளான்.

ரஃபிக் மற்றும் அந்த பெண் செல்போனில் பேசத் தொடங்கியுள்ளனர். ரஃபிக் தனது போலி ஆதார் கார்டை குடும்பத்தினரிடம் காட்டி திருமணத்திற்கு ஒப்புதல் கோரியுள்ளான். டிசம்பர் 27 இல் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்திருந்தனர்.

இருப்பினும் திருமணம் செய்வதற்கு முன்பு சில இந்து அமைப்பினர் இவரின் போலி அடையாளம் குறித்து அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதனையடுத்து ரஃபிக் தான் போலி ஆதார் கார்டை பயன்படுத்தியதை விசாரணையில் ஒப்புக்கொண்டான். இவன் போலி அடையாளத்தை குடும்பத்தினரிடம் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் தன்னை ஒரு அனாதை என்றும் அறிமுகம் செய்துள்ளான்.

இதனை அடுத்து பெண்ணின் புகாரின் பேரில் கோலார் காவல் நிலையத்தில் காவல்துறை ரஃபிக்கு எதிராக நேற்று FIR பதிவு செய்தது. போபால் ADG சாய் கிருஷ்ணா, குற்றவாளி போலி ஆதார் அட்டை பயன்படுத்தியதை உறுதி செய்தார். மேலும் இந்த குற்றத்திற்குப் பின்னால் அவரது நோக்கம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News