ம பி: போபாலைச் சேர்ந்த சிறுமியின் மர்ம மரணத்தில் எழும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டுகள்.!
ம பி: போபாலைச் சேர்ந்த சிறுமியின் மர்ம மரணத்தில் எழும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டுகள்.!

By : Saffron Mom
நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனையான லவ் ஜிகாத் வழக்கு தொடர்பாக தற்போது ஒன்று மத்தியப் பிரதேசத்தில் முன் எழுந்துள்ளது. இந்த வழக்கில் மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்த சிறுமியின் மரணத்தில் அவளது குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் லவ் ஜிகாத் வழக்குக்கு முன்வைத்துள்ளது.

அந்த சிறுமி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் ஆனால் போபாலில் ஒரு ஆணின் குடும்பத்தினரோடு வசித்துவந்துள்ளார். மேலும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அந்த ஆணுடன் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான்சி பகுதியைச் சேர்ந்த தாஹிர் கடத்தல் மற்றும் மற்ற வழக்கில் தொடர்புடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறை போபாலுக்குச் சென்று குற்றவாளியைத் தேடியபோது அவர் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி பாரதி, தரன்னம் என்ற பெயரில் போபால் சுனாபட்டியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நுரையீரல் மற்றும் ஹீமோகுளோபின் தொடர்பான பிரச்சனைகளில் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவர் இறந்துவிட்டார். மேலும் பிரேதப் பரிசோதனை செய்யவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமியின் உண்மை பெயர் மீனா பாரதி ஆனால் அவர் தரன்னம் என்ற பெயரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவரது வயது 19 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சமயத்தில் அவர் 18 வயதுக்குக் கீழ் உள்ள மைனர் சிறுமியாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகள், குற்றச்சாட்டப்பட்ட தாஹிர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்யக் கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பாரதியின் விருப்பம் இன்றி அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
