Kathir News
Begin typing your search above and press return to search.

லவ் ஜிஹாத் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தினால் நடந்த முதல் கைது!

லவ் ஜிஹாத் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தினால் நடந்த முதல் கைது!

லவ் ஜிஹாத் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தினால் நடந்த முதல் கைது!

Saffron MomBy : Saffron Mom

  |  19 Jan 2021 1:01 PM GMT

தற்போது நாட்டில் அதிகம் இருக்கின்ற பிரச்சனையில் ஒன்றான லவ் ஜிகாத் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் அதற்கு எதிராகச் சட்டங்களை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு லவ் ஜிகாத் வழக்கு வெளிவந்துள்ளது. 22 வயது பர்வானி என்ற பெண்மணி வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச காவல்துறை மத சுதந்திர சட்டம் 2020 கீழ் சோஹைல் மன்சூரி என்ற நபரைக் கைது செய்துள்ளது.
புகாரில் அந்த பெண்மணி அந்த நபர் தான் முன்னரே திருமணமானவர் என்னும் உண்மை அடையாளத்தை மறைத்து நான்கு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது உண்மை அடையாளத்தை வெளிப்படுத்தியது உடன் தன்னை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். மன்சூரி இந்தியத் தண்டனை சட்டம் 376, 506, 323, கீழ் மற்றும் மத சுதந்திர சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பர்வானி மாவட்டத்தில் உள்ள பல்சுட் பகுதியில் அவரை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் ஓட்டுநராக வேலை செய்து வந்தார் இருப்பினும் நிகழ்ச்சிகளில் இசை வாசிப்பார் என்று கூறியுள்ளார். "அவர்கள் இருவரும் தங்கள் மொபைல் நம்பர்களைப் பகிர்ந்து கொண்டனர். விரைவில் உடல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்," என்று புகாரில் தெரிவித்ததாக ராஜேஷ் யாதவ் கூறினார்.
தனது உண்மையை வெளிப்படுத்தியபோது சோஹைல் திருமணம் செய்ய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்தபோது பலமுறை தாக்கியும் உள்ளார். சோஹைல் குறித்துப் பல விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினோம் பல உண்மை வெளிவந்தது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது என்று யாதவ் தெரிவித்தார். சோஹைல் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 10 இல் மத்தியப் பிரதேச அரசாங்கம் லவ் ஜிகாத்கு எதிராக மத சுதந்திர சட்டத்தை அமல்படுத்தியது. தற்போது ஒருவரைத் திருமணம் அல்லது வலுக்கட்டாயமாக மதமாற்றத்திற்கு உட்படுத்துவது குற்றமாகக் கருதப் படுகின்றது. மேலும் அந்த குற்றத்துக்கு பெயில் எதுவும் வழங்கப்படாது மற்றும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கப்படுகின்றது. இந்த சட்டம் அமல் படுத்தியதைத் தொடர்ந்து முதலாவதாகக் கைது செய்யப்பட்டது சோஹைல் ஆவார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News