சீன நிறுவனத்திடம் நிதி பெற்று அரசியல் செய்யம் எம்.பி- அதிர்ச்சித் தகவல்கள்.!
சீன நிறுவனத்திடம் நிதி பெற்று அரசியல் செய்யம் எம்.பி- அதிர்ச்சித் தகவல்கள்.!

By : Yendhizhai Krishnan
அஸ்ஸாம் மக்களவை உறுப்பினராக இருக்கும் பத்ருதீன் அஜ்மல் சீன அரசு நிறுவனம் ஒன்றிடம் இருந்து 2013-14 நிதியாண்டில் நன்கொடை பெற்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. AIUDF கட்சித் தலைவரான பத்ருதீன் அஜ்மல் பல சேவை அமைப்புகளை நடத்தி வருகிறார். அவற்றுள் ஒன்றான மர்கசுல் மாரிஃப் அறக்கட்டளை சீன அரசு நிறுவனமான Reem International HK, Ltd என்ற நிறுவனத்திடமிருந்து 2013-14 நிதியாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.
இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Legal Rights Observatory அமைப்பு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஏன் அஜ்மலின் அறக்கட்டளைக்கு நிதி வழங்குகிறது?, உய்குர் முஸ்லிம்களுக்கு சீனாவில் அநீதி இழைக்கப்படும் போது சீன அரசுடன் தொடர்பில் இருந்த இஸ்லாமியர் யார், ஏன்? மற்றும் இருவரில் யார் முதன் முதலில் தொடர்பு கொண்டது? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
#Shocking Badruddin Ajmal's @BadruddinAjmal trust Markazul Maarif received #FCRA funds from #China Govt company Reem International HK, Ltd. Huanshi Dong Rd, Guangzhou, China, 510065 in yr 2013-14; when #Chinese Govt torturing millions of #Uyghur Muslims of #Xinjiang (See below) + pic.twitter.com/yAe3ihDUt5
— Legal Rights Observatory- LRO (@LegalLro) December 23, 2020
மேலும் சீன நிறுவனத்திடம் இருந்து எம்.பி அஜ்மலின் அறக்கட்டளை நன்கொடை பெற்றது குறித்த ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, அஜ்மல் மற்றும் அவரது அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளது. அஸ்ஸாமில் வசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அஜ்மல், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி சட்ட விரோதமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னர் இதே மர்கசுல் மாரிஃப் அறக்கட்டளை துருக்கி மற்றும் இங்கிலாந்தில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக கவுகாத்தி காவல் துறை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அல்-கொய்தா, ஹிஜ்புல் முஜாகிதீன் மற்றும் எகிப்து, குவைத் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்தும் அஜ்மலின் அமைப்பு நன்கொடை பெற்றது. இந்த வகையில் கிட்டத்தட்ட ₹70 கோடி ரூபாய் நிதியை தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து மர்கசுல் மாரிஃப் அமைப்பு பெற்றுள்ளது.
Don't term Facts as Propaganda Mr @BadruddinAjmal; Your #Turkish donor #IHH has clear cut #AlQaida links proven by #Turkey Govt not by @narendramodi or @AmitShah Govt. U can't hoodwink @sarbanandsonwal, a man behind scrapping Pro Bangladeshi #IMDT. Wait 4 inquiry! @himantabiswa + pic.twitter.com/oVZvWDJ3iw
— Legal Rights Observatory- LRO (@LegalLro) December 17, 2020
இவ்வாறு நன்கொடை அளித்தவர்களில் ஒருவர், அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தகர்க்கக் காரணமான காலித் ஷேக் முகமது மற்றும் தாரீக் அல் சுவைதான் ஆகியோருடன் தொடர்புள்ளவர் என்று தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதியை அரசியல் காரணங்களுக்கு பண்படுத்தக் கூடாது என்று விதி இருக்கும் போது, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக நிதி பெற்று தவறாக பயன்படுத்தியதாக அஜ்மல் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
₹70 கோடி வெளிநாட்டு நிதியில் ₹2 கோடி மட்டுமே கல்விக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், மீதிப் பணம் இந்துத்துவாவை எதிர்க்க அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் LRO அமைப்பு குற்றம் சாட்டுகிறது. இதையடுத்து இந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
