Kathir News
Begin typing your search above and press return to search.

இலவச மருத்துவம், கல்வி என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சி!

இலவச மருத்துவம் கல்வி என்ற பெயரில் பழங்குடி கிராம மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சி.

இலவச மருத்துவம், கல்வி என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Dec 2021 12:30 AM GMT

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களில் ஒன்றான ஜபுவா பகுதியில், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களுக்கு எதிராக மத மாற்றம் செய்ததாகக் கூறி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பழங்குடியின மக்களை இலவச கல்வி மருத்துவம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சி தற்பொழுது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது, பழங்குடியின கிராம மக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதாக கூறி, ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பிச்சோலி கிராமத்தில் கத்தோலிக்க தேவாலய பாதிரியார் மற்றும் ஒரு போதகர் உட்பட மூன்று பேரை மத்தியப் பிரதேச போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.


மேலும் இவர்கள் மீது மதமாற்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மிஷினரிகள் நடத்தும் பள்ளிகளில் இத்தகைய செயல்கள் அதிகரித்து வருவதாகப் பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி அவர்கள் கூறுகையில், யார்? யாரெல்லாம்? கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகிறார் என்று கண்காணிக்கப்பட்டு, அவர்களுடைய குடும்பம் முழுவதற்கும் இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் அளிக்கப்படுவதாக அவர்களுக்கு உறுதி அளித்து இத்தகைய மதமாற்ற செயல்களில் ஈடுபடுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மத்தியப் பிரதேசம், டிசம்பர் 15 வரை மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் என்பது பிரபலமாக அறியப்படும். இந்த மாதத்தில் மட்டும் மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டத்தின் கீழ் 62 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் குறைந்தது 38 கிறிஸ்தவர்களுக்கு எதிரானவை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தில் இத்தகைய அதிகமான வழக்குகள் பதிவாவது இதுவே முதல் முறையாகும்.

Input & Image courtesy: Indianexpress



Next Story
கதிர் தொகுப்பு
Trending News