ம.பி. : பேரணி நடத்திய இந்துக்கள் இந்துக்கள் மீது கல் வீச்சு தாக்குதல் - காவல்துறை அதிரடி நடவடிக்கை!
ம.பி. : பேரணி நடத்திய இந்துக்கள் இந்துக்கள் மீது கல் வீச்சு தாக்குதல் - காவல்துறை அதிரடி நடவடிக்கை!

நேற்று மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் பெகும்பாக் பகுதியில் இந்து குழுக்கள் சிலர் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, ராம் நிதி சங்கரன் பேரணி நடத்தினர். சில முஸ்லீம் கும்பல் அவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நேரடியாக நடவடிக்கை எடுத்தது.
பேரணி நடத்திய இந்து குழுக்கள் மேல் ஒரு வீட்டில் இருந்து சில பெண்கள் மற்றும் குழந்தைகள் கற்களை வீசினர். அதனைத் தொடர்ந்து காவல்துறை மாவட்ட மாநகராட்சியில் அந்த கட்டிடத்தை இடித்தனர். விசாரணையில் அந்த வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்பதால் JCB யால் அகற்றப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை(நேற்று) இந்துக்கள் சிலர் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி திரட்ட ராம் நிதி சங்கரன் பேரணியைத் தொடங்கினர். இந்த பேரணியானது கோபுர பகுதியில் இருந்து தொடங்கப்பெற்று மஹாகல் பகுதியில் பாரத் மாதா கோவிலில் நிறைவடைய திட்டமிடப்பட்டது. இருப்பினும் அவர்கள் முஸ்லீம் குடியிருப்புப்பகுதியான பேகும் பாக்ஹ் பகுதியில் நுழைந்த போது, சில முஸ்லீம் கும்பல் வீட்டின் கூரைமேல் இருந்து கல்வீச்சு தொடங்கினர்.
அதனால் அந்த பேரணியில் பங்கேற்ற மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட தொடங்கினர் மற்றும் வாகனங்களையும் அங்கேயே விட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வளைத்ததில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரணியின் மீது கல் வீச்சு நடத்தியதைக் காணமுடிந்தது.
Madhya Pradesh: Police and municipal teams demolished house in Ujjain's Begum Bagh from where women and children threw stones on Ram Yatra taken out on Friday to collect funds for temple construction in Ayodhya pic.twitter.com/DU3eBaNZA7
— Free Press Journal (@fpjindia) December 26, 2020
அந்த கும்பல் பேரணி நடத்தியவர்கள் வாகனங்களை அங்கு விட்டுச் சென்று ஓடிய பின்னும் கல் வீச்சை நிறுத்தவில்லை. மேலும் அவர்கள் சட்ட ரீதியாக எந்த அச்சமும் இன்றி தெருவில் வந்து அந்த வாகனங்களைச் சூறையாடினர். பின் காவல்துறை நேரடியாக இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்தது.