250 கோடி ரூபாய் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்த எம்.பி
தெலுங்கானா டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி 250 கோடி ரூபாய் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By : Mohan Raj
தெலுங்கானா டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி 250 கோடி ரூபாய் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த டி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி பொங்கலேட்டி சீனிவாச ரெட்டி தனது மகளுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்துள்ளார்.
இவரின் மகள் சொப்னா ரெட்டியின் திருமணம் கடந்த 12ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்துள்ளது, திருமணத்தில் பங்கேற்க 500 பேரை சிறப்பு விமானத்தில் பாலி தீவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக கம்மம் மாவட்டத்தில் உள்ள தனது மகளுக்கு வரவேற்பு விழாவை சீனிவாச ரெட்டி மிக பிரமாண்டமாக நடத்தினார், இதுதான் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. டி.ஆர்.எஸ் கட்சியின் முன்னாள் மக்களவை எம்.பி சீனிவாசன் ரெட்டி இவர் மிகப் பெரிய தொழிலதிபர் தனது மகளின் திருமணத்திற்கு வெளிநாடு அழைத்துச் செல்ல முடியாதவர்களுக்கு வரவேற்பு அளித்திருந்தார் எத்தனை பேர் தெரியுமா மூன்று லட்சம் பேர் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
மூன்று லட்சம் பேருக்கும் உணவு மற்றும் வந்து செல்லும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வரவேற்புக்காக விருந்துக்காக மட்டும் 25 ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு அன்று சாப்பாடு பரிமாறப்பட்டது.
