Kathir News
Begin typing your search above and press return to search.

MSP-க்கு கீழ் கோதுமை கொள்முதல் செய்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ₹76,000 கோடி..!

MSP-க்கு கீழ் கோதுமை கொள்முதல் செய்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ₹76,000 கோடி..!

JananiBy : Janani

  |  6 Jun 2021 6:00 AM GMT

நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நடப்பு ராபி பருவத்தில்(RMS) கொள்முதல் செய்யப்பட்ட கோதுமைகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியா 76,000 கோடியை அரசு பரிவர்த்தனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுப்பப்பட்ட மொத்த பணத்தில் பெரும் அளவு பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு 26,000 மற்றும் 16,700 கோடி கிடைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையின்(MSP) கீழ் நேரடி வங்கி பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்ட கடைசி மீதமுள்ள மாநிலங்கள் இரண்டும் இது முக்கியத்துவம் பெறுகின்றது.

MSP கீழ் கோதுமை கொள்முதல் செய்வதற்கான மொத்த செலவு 81,200 கோடி என்பதால் இந்த பணம் மேலும் அதிகரிக்கும். பெரியளவிலான பரிவர்த்தனை உள்ளதால் பணம் பரிமாற்றம் செய்ய இரண்டு மூன்று நாட்கள் எடுக்கும்.

மேலும் நுகர்வோர் விவரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட தகவல் அறிக்கையின் படி, நேரடி வங்கிக் கணக்கு பரிமாற்றத்தில் நாடுமுழுவதும் 44.4 லட்ச விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அரசாங்கம் கோதுமை கொள்முதலில் 6 லட்சம் டன் அதிகரித்து 433 லட்சம் டன் இலக்கை அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு RMS கொள்முதல் 390 டன்னாக இருந்தது.

Source: ஸ்வராஜ்யா

Next Story
கதிர் தொகுப்பு
Trending News