அடிப்படையே புரியாமல் ஆட்சி நடத்தும் பினராயி விஜயன் அரசு - இரண்டு நாட்களில் எதற்கப்பா இவ்வளோ முரண்பாடு?
அணை மிக பலவீனமாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
By : Muruganandham
கேரள முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதற்குள் அணை மிக பலவீனமாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறி இருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் பேசும்போது, முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், தேவையற்ற அச்சம் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணை மிகுந்த பலவீனமாக இருப்பதாகவும் இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டிய தேவை இருப்பதாகவும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 5 மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கும் என்று கேரள அரசு கூறியுள்ளது.
142 அடிக்கு தண்ணீர் சேமிக்கலாம் என்ற மேற்பார்வைக் குழுவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. கேரள அரசின் இத்தகைய நிலைப்பாடு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.