Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு  நிதி திரட்டும் முஸ்லீம் பெண்!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு  நிதி திரட்டும் முஸ்லீம் பெண்!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு  நிதி திரட்டும் முஸ்லீம் பெண்!

Saffron MomBy : Saffron Mom

  |  20 Jan 2021 12:26 PM GMT

தற்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் எதிர்த்து சில முஸ்லீம் கும்பல்கள் நிதி திரட்டுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தாலும், பலர் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை நினைவில் கொண்டு திறந்த மனதுடன் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு உதவியளித்து வருகின்றனர்.

தற்போது முஸ்லீம் பெண்மணி ஒருவர் தனது நிதியை ராமர் கோவிலுக்கு அளித்துள்ளார். மேலும் தாஹிரா அறக்கட்டளையின் அமைப்பாளரான சஹாரா பேகம் இந்து கடவுளான ராமர் கோவில் கட்டப்படுவதை ஊக்குவித்து மற்ற முஸ்லீம் சமூகத்தையும் திறந்த மனதுடன் நிதிக்குப் பங்களிக்கக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் இந்து பண்டிகைகளான விநாயக சதுர்த்தி, தசரா, ராம நவமி போன்றவற்றுக்கு இந்து சகோதர சகோதரிகளுக்கு முஸ்லீம் உட்படப் பிற சமூகத்தினர் ஆதரவளித்து வழங்கும் நிதி குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும் அதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியம் என்று குறிப்பிட்டார்.
மேலும் நிதி சேகரான நிகழ்ச்சியின் போது ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நிதி வழங்குமாறு முஸ்லீம் சமூகத்தை சஹாரா பேகம் கேட்டுக்கொண்டார். மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிதி வழங்கலாம். ஒருவர் 10 ரூபாய் கூட நிதியாக வழங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளாகக் கிராம மக்களுடன் பணிபுரியும் போது முஸ்லீம் சமூகத்துக்கு மசூதி, இடக்காஹ்ஸ் மற்றும் கல்லறைகள் கட்டுவதற்கு இந்து சமூகத்தினர் தங்கள் நிலங்களை வழங்கியதையும் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "முஸ்லீம் அல்லாதவர்கள் பலர் தங்கள் விவசாய நிலங்களை முஸ்லீம்களுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் இந்துக்கள் மசூதிகள், கல்லறைகள் கட்டவும் உதவியிருக்கின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News