உங்க நாட்டைவிட இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் - பாகிஸ்தானுக்கு அஜ்மீர் தர்கா மதகுரு பதிலடி
'பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்களை விடவும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்' என அஜ்மீர் தர்கா மதகுரு தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியர்களை விடவும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்' என அஜ்மீர் தர்கா மதகுரு தெரிவித்துள்ளார்.
மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ தெரிவித்த கருத்து இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க சார்பில் இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அஜ்மீர் தர்கா மதகுரு நசருதின் சிஷ்டி கூறியதாவது, 'நம் தாய் நாட்டுக்கு பிரதமருக்கும் எதிரான பிலாவால் பூட்டோவின் கொடிய வார்த்தைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். போட்டோ தான் பதவியை மட்டுமல்ல தன்னுடைய முழு தேசத்தையும் தரம் தாழ்த்தி விட்டார்.
தீவிரவாதி ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை ஆனால் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கீழ் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் என்பதை பூட்டோ மறந்துவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு அனைவரின் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது, அதோடு இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் இஸ்லாமியர்களை விடவும் பாதுகாப்பாக சிறந்த முறையில் இருக்கின்றனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்' எனவும் கூறினார்.