Kathir News
Begin typing your search above and press return to search.

"சொந்த மகன்களே என்னை அடித்தனர்.. பிரதமர் தான் பென்ஷன் கொடுத்தார்" - உருகும் 85 வயது பாட்டி.!

"சொந்த மகன்களே என்னை அடித்தனர்.. பிரதமர் தான் பென்ஷன் கொடுத்தார்" - உருகும் 85 வயது பாட்டி.!

சொந்த மகன்களே என்னை அடித்தனர்.. பிரதமர் தான் பென்ஷன் கொடுத்தார் - உருகும் 85 வயது பாட்டி.!

Saffron MomBy : Saffron Mom

  |  4 Dec 2020 11:45 AM GMT

பிரதமர் மோடிக்கு பெண்களிடத்தில் குறிப்பாக கிராமப்புற பெண்களிடத்தில் அமோக ஆதரவு உள்ளது என்பது பல தேர்தல்களில், பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களின் அடிப்படை தேவைகளான கேஸ், கழிவறை, சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம், முதியவர்களுக்கு பென்ஷன் என பல அடிப்படையான திட்டங்களை மோடி அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

இதன் பெரும்பாலான பயனாளிகள் பெண்களும் கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்களுமாக உள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நியூஸ் 24 செய்தியின் தலைமை செய்தியாளர் மானக் குப்தா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு 85 வயது பெண்மணி தன் நிலம் முழுவதையும் பிரதமர் மோடிக்கு அளிக்க விரும்புவதாக குறிப்பிடும் வீடியோவைப் பகிர்ந்தார். அவ்வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அந்த முதிய பெண்மணி தன்னுடைய 12 பிஹா நிலத்தையும் பிரதமர் மோடிக்கு, அவர் செய்த அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் தான் வழங்குவேன் என்று தெரிவித்தார்.

வருகின்ற தகவல்களின்படி, அந்த 85 வயது பெண்மணியின் பெயர் பிட்டான் தேவி. அவர் உத்திரப்பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் இருந்து வருகிறார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பிட்டான் தேவியின் கணவர் மறைந்து விட்டார். அவர் தற்பொழுது தன்னுடைய மகன்கள் மற்றும் மருமகள்களை சார்ந்து இருக்கிறார். அவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளவில்லை. அரசாங்கம் வழங்கும் பென்ஷனை நம்பி மட்டுமே இவர் வாழ்கிறார்.

பிட்டான் தேவி வீடியோவை எடுக்கும் நபரிடம், அவருடைய சொந்த மகன்கள் அவரைத் தாக்கியதாகவும், ஆனால் பிரதமர் மோடி தனக்கு பென்ஷன் வழங்கியதாகவும் தெரிவித்தார். மோடி உங்களுக்கு என்ன செய்தார் என்று கேள்வி கேட்ட போது, "மோடி எனக்கு பணம் தருகிறார். மாதம் 2000 ரூபாய். எனவே என்னுடைய 12 பிகா நிலத்தையும் நான் மோடிக்கு வழங்குவேன்" என்று தெரிவித்தார்.

தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்ட அவர், தனக்கு மூன்று மகன்கள் பல பேரன் பேத்திகள் இருப்பதாகவும் ஆனாலும் தனக்கு உதவ ஒருவரும் இல்லை என்று கூறி, உயிருடன் இருப்பதே தனக்கு பிடிக்கவில்லை விரைவில் இறந்து விட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி தனக்கு செய்த உதவிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.

சென்ற மாதம் பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து கூடிய வீடியோ வைரல் ஆனது நினைவிருக்கலாம். அந்தப் பெண்மணியிடம் எதற்காக நீங்கள் NDA விற்கு ஓட்டு போடுவீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, தான் பலன் பெற்ற பல மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். அதன்பிறகு பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் அந்தப் பெண்மணியின் பெயரைக் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News