Begin typing your search above and press return to search.
மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரி ரத்து.. மத்திய அரசு உத்தரவு.!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு 30 சதவீதமாக இருந்த வரி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
அதிகளவு பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளில் மைசூர் பருப்பு ஒன்றாகும். இந்த பருப்பு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவு மைசூர் பருப்பு பயன்படுத்தி வருகின்றனர். பருப்பின் விலை அதிகரித்திருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு 30 சதவீதமாக இருந்த வரி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Next Story
