Kathir News
Begin typing your search above and press return to search.

N 95 முக கவசங்களுக்கு மாற்றாக SHG 95 முக கவசத்தை தயாரித்த மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை!

N 95 முக கவசங்களுக்கு மாற்றாக SHG 95 முக கவசத்தை தயாரித்த மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை!

ParthasarathyBy : Parthasarathy

  |  11 Jun 2021 7:00 AM GMT

இந்த கொரோனா காலத்தில் மக்கள் "N 95" முக கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர், ஆனால் இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் இதன் விலை மிகவும் அதிகம் என்பதால் வெகு சிலர் மட்டுமே இந்த N 95 முக கவசத்தை பயன்படுத்த முடிந்தது, பல மக்களால் இதை வாங்க இயலவில்லை. இந்த நிலையில் இதற்கு மாற்றாக மலிவு விலை மற்றும் பல முறை பயன்படுத்தும் விதமாக "SHG 95" முக கவசத்தை மத்திய தொழில்நுட்ப துறை உருவாக்கி உள்ளது.


கொரோனா நிதித் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (BIRAC), ஐகேபி நாலேஜ் பார்க் போன்ற அமைப்புகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கின. இதன்மூலம் 'SHG 95' என்கிற வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து தொழில்நுட்ப துறை "இந்த 'எஸ்எச்ஜி- 95' முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீதம் நுண்ணிய கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசங்களுக்கு ₹50 முதல் ₹75 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்த ஹைதராபாத் நிறுவனத்தில் முதலீடு செய்து 1,45,000 முகக்கவசங்களை பெற்றுள்ளது." என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News