ரூ.470 கோடியில் தேசிய கடலோர காவல் துறை வளாகம்.. எல்லைகளுக்கு மோடி அரசு கொடுக்கும் முக்கியத்துவம்..
குஜராத், துவாரகாவில் ரூ.470 கோடி செலவில் கட்டப்படவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் நிரந்தர வளாகம்.
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடலோரப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த 450 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய கடலோரக் காவல் அகாடமியின் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார். நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் எல்லைக் காவலர்களின் வாழ்க்கை மற்றும் பணி வசதிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் குடும்பங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதற்கும் நாட்டின் பாதுகாப்பிற்காக அதிநவீன உபகரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முந்தைய அரசில் கடலோரப் பாதுகாப்புக்கான பயிற்சிக் கொள்கை எதுவும் இல்லை. 2018-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கடலோரக் காவல் அகாடமிக்கு ஒப்புதல் அளித்தார். திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியால் நாட்டின் கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பணி இன்று நடைபெறுகிறது. பிரதமர் தலைமையிலான அரசு இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல்படை, கடற்படை போலீஸ், சுங்கம் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வளையத்தின் சுதர்சன சக்கரத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் இந்திய கடற்படை மற்றும் என்சிபி ஆகியவை இந்திய உளவுத்துறையின் உதவியுடன் கேரள கடற்கரையிலிருந்து 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைக் கைப்பற்றியது. முந்தைய அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ. 680 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்திய பாதுகாப்பு முகமைகள் ஒரே நேரத்தில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன. இது நமது ஏஜென்சிகள் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் அமையவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
Input & Image courtesy: News