Kathir News
Begin typing your search above and press return to search.

பழங்குடியினர் வாழ்வில் ஒளியேற்றும் மத்திய அரசின் திட்டம் : மாற்றத்திற்கான பயணத்தில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி!

Narendra Modi laid foundation Stone of 50 new Eklavya Model Residential Schools on the occasion of Janjatiya Gaurav Divas

பழங்குடியினர் வாழ்வில் ஒளியேற்றும் மத்திய அரசின் திட்டம் : மாற்றத்திற்கான பயணத்தில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி!

MuruganandhamBy : Muruganandham

  |  20 Nov 2021 1:16 PM GMT

ஜன் ஜாத்தியா கவுரவ் திவாஸ் நிகழ்வை முன்னிட்டு பிரதமர் 50 பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, ஏகலைவா பள்ளிகள் கட்டுமானப் பணி பெரும் ஊக்கம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிகள் 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளது.

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியின் முக்கியத்துவம்:

பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிப்பதுடன், ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்தொகையை கொண்ட மற்றும் குறைந்தது 20,000 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரங்களில் இது போன்ற பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த 50 பள்ளிகளில், 20 பள்ளிகள் ஜார்க்கண்டில் அமைக்கப்பட உள்ளன. ஒடிசாவில் 15, ஆந்திரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தலா 4, மகாராஷ்டிராவில் 3, மத்தியப்பிரதேசத்தில் 2 பள்ளிகளும், திரிபுரா மற்றும் தாத்ரா – நாகர்ஹவேலியில் தலா 1 பள்ளியும் அமைக்கப்பட உள்ளன.

இந்தப்பள்ளிகள் நாட்டில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அமைக்கப்படுவதுடன் நாட்டின் தொலை தூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News