Kathir News
Begin typing your search above and press return to search.

"உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்!"- சிறுவர் சிறுமிகளுக்கு பிரதமரின் அழகான அறிவுரை!

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்!- சிறுவர் சிறுமிகளுக்கு பிரதமரின் அழகான அறிவுரை!

DhivakarBy : Dhivakar

  |  26 Jan 2022 7:16 AM GMT

"நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்று எண்ணிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கனவை இளைஞர்கள் நினைவாக்க வேண்டும்" என்று 'பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்' விருது பெரும் சிறுவர்களிடம் பாரத பிரதமர் உரையாற்றினார்.


பிரதமர் மோடி தன் ஆட்சியில் , சிறுவர் சிறுமிகளின் மேம்பாட்டிற்காக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். தன் மாதாந்திர "மன் கி பாத்" உரையில், எப்பொழுதெல்லாம் சிறுவர்களுக்கு அறிவுரை வேண்டுமோ அப்பொழுதெல்லாம் அவர் தக்க அறிவுரைகளை வழங்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


அதே போல் உள்நாட்டுத் தயாரிப்புகளை மேம்படுத்த " ஆத்ம நிர்பார்" போன்ற மகத்தான முயற்சிகளையும் ஒரு புறம் செய்து வருகிறார். உள் நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிக அளவில் நுகரும் பொழுது, நாட்டின் பொருளாதாரம் தன்னிச்சையான வளர்ச்சியை அடையும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.


"சுய சார்பு" பிரச்சாரத்தை இரண்டு ஆண்டுகளாக பிரதமர் அதிகமாக செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சிறுவர்களுக்காக வழங்கப்படும் 'பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்' விருது வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் இது குறித்து சிறுவர்களுக்கு ஊக்கவிக்கும் உரையை நிகழ்த்தினார்.


அவரது உரையின் முக்கிய அம்சமாக: நாட்டுக்கு உழைப்பதே முதன்மையானது என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கனவை இளைஞர்கள் நினைவாக்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் இந்திய நாடு பெருமை கொள்கிறது.இந்தியாவில் உள்ள சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சிறுவர்களுக்கு சிறுவயதில் கூறும் வார்தைகள் அவர்களது எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் அதை அழகாக செய்து வருகிறார்.

Maalaimalar




Next Story
கதிர் தொகுப்பு
Trending News