Kathir News
Begin typing your search above and press return to search.

"ஓரே சூரியன், ஒரே உலகம், ஒரே ஒரு நரேந்திர மோடி! " - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் !

ஓரே சூரியன், ஒரே உலகம், ஒரே ஒரு  நரேந்திர மோடி!   - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் !

DhivakarBy : Dhivakar

  |  4 Nov 2021 10:09 AM GMT

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை " ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே ஒரு நரேந்திர மோடி " என்று பெருமைப்படுத்தி பேசிய பேச்சு பேசு பொருளாகியுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை எதிர்கொள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை பாராட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார் " இந்த பருவ நிலை மாற்றத்தை கையாள ஒருவர் இருக்கிறார். ஒரு மணி நேர சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி இந்த உலகத்திற்கு ஒரு வருடம் மின் சக்தியை பெற முடியும் என்று புரிந்து கொண்டவர் . அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு நரேந்திர மோடி " என இந்தியர்கள் பெருமைபடும் வகையில் இங்கிலாந்து பிரதமர் பேசினார்.

Youtube

Next Story
கதிர் தொகுப்பு
Trending News