இரவிலும் தேசியக்கொடியை பறக்க விடலாம்: மத்திய அரசு அறிவிப்பின் பின்னணி
By : Thangavelu
தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரியன் மறைவதற்கு முன்பாகவே இறக்கிவிட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறையும். ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அதில் பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு காதி உள்ளிட்டவைகளில் செய்யப்பட்டிருக்கலாம்.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நமது நாட்டின் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் வருவதையொட்டி இந்த ஆண்டு சுதந்திரதினம் 'ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ்' என்ற பெயரில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi