சர்வதேச அறிவியல் வெளியீடு: 7ம் இடத்தில் இருந்து இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேற்றம்!
By : Kathir Webdesk
அறிவியல் வெளியீடுகளில் சர்வதேச தரவரிசையில் இந்தியா 7-வது இடத்தில் இருந்து, 3-ம் இடத்திற்கு முன்னேறியிருப்பதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்க தெரிவித்துள்ளார். சுதந்திரமாகக் பணியாற்றும் சூழலை பிரதமர் மோடி உருவாக்கிக் கொடுத்ததே, இந்தியாவின் இந்த சாதனைக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் கூட்டமைப்பின், அறிவியல் மற்றும் பொறியியல் காரணிகள் 2022 அறிக்கையில், சர்வதேச அளவில் அறிவியல் வெளியீடுகளில், கடந்த 2010ம் ஆண்டு 7ம் இடத்தில் இருந்த இந்தியா, 2020ம் ஆண்டு 3ம் இடத்திற்கு முன்றேயிருக்கிறது என்றுத் தெரிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதேபோல் 2010ம் ஆண்டு 60,555 ஆக இருந்த இந்திய அறிவியலாளர்களின் வெளியிடுகளின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டு 1,49,213-ஆக அதிகரித்திருப்பதையும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 8 ஆண்டுகளில், அறிவியல் துறைக்கு பிரதமர் அளித்த ஊக்கம் காரணமாக, அறிவியல் சக்தி, தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறை முனைவர்களின் தரவரிசையில் இந்தியா தற்போது 3ம் இடம் வகிப்பதாகப் பெருமிதம் தெரிவித்த டாக்டர் திரு. ஜிதேந்திர சிங், கடந்த 3 ஆண்டுகளில், இந்திய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் காப்புரிமை 2,511 –ல் இருந்து 5,629ஆக அதிகரித்திருக்கிறது என்றும் கூறினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்குக் கூடுதலாக 20 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Input From: News On air