ரொட்டியில் எச்சில் துப்பியவர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.!
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது சமையல் செய்த நபர் ரொட்டி மீது எச்சில் துப்பியதாக கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By : Thangavelu

மீரட் நகரில் தந்தூரில் சமைப்பதற்கு முன்பு, ரொட்டி மீது எச்சில் துப்பிய சோஹைலை, அங்கு இருந்த நபர் ரகசியமாக வீடியோ எடுத்திருந்தார்.
இந்த காட்சிகள் கடந்த பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த காட்சிகளை பார்த்து வெறுப்படைந்த நெட்டிசன்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனிடையே அந்த நபரின் குடும்பத்தார் அண்மையில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீதிமன்றம் அவருடைய மனுவை நிராகரித்து விட்டது. அவரை வெளியில் விட்டால் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.