சிவன் கோயிலை சுத்தம் செய்து பக்தியுடன் வழிபாடு நடத்திய குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!
By : Thangavelu
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தலைவர் திரௌபதி முர்மு சிவன் கோயிலை சுத்தம் செய்து வழிப்பாடு நடத்தியுள்ளார்.
இந்திய நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவாகின்ற வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளது. அதே போன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராய்ரங்பூர் சிவன் கோயிலுக்கு திரௌபதி முர்மு சென்றார். அங்கு சிவாலயத்தை கூட்டி சுத்தம் செய்தார். அதன் பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு ஆரத்தழுவி வழிபாடு நடத்தினார். மேலும், ஜகந்நாதர், ஹனுமான் ஆலயங்களுக்கும் திரௌபதி முர்மு சென்று வழிபாடு நடத்தினார். அதே நேரத்தில் ஒடிசா மாநிலம் முழுவதும் முர்முவை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Source, Image Courtesy: One India Tamil