Kathir News
Begin typing your search above and press return to search.

பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதி வழங்கும் மத்திய அரசு!

பொலிவுறு நகரங்கள் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 48,000 கோடி நிதி வழங்கும் மத்திய அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2022 2:36 AM GMT

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பொலிவுறு நகரங்கள் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 4 சுற்று போட்டியின் மூலம் 100 பொலிவுறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கடந்த 2016ஆம் ஆண்டில் 20 நகரங்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த 20 நகரங்களின் வளர்ச்சியை 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. அகமதாபாத், புவனேஸ்வர், புனே, கோயம்புத்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், சூரத், கவுகாத்தி, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், இந்தூர், போபால், உதய்பூர், லூதியானா காக்கிநாடா, பெல்காம், சோலாப்பூர் மற்றும் புவனகிரி, டெல்லி என்டிஎம்சி ஆகியவைதான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள். அடுத்த சுற்றில் மேலும் சில நகரங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பொலிவுறு நகரங்கள் திட்ட வழிகாட்டுதலின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.48,000 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும். சராசரியாக வருடத்திற்கு ரு. 100 கோடி அளிக்கும்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 8-ம் தேதியின்படி, 100 நவீன நகரங்களுக்காக ரூ.30,751.41 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், 90% அளவாக ரூ.27,610.34 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,333.87 கோடி வழங்கப்பட்டதில் ரூ.3,932.06 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர்கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

Input From: Samayam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News